இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Jun 2025 9:47 AM IST
ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசு பதவி ஏற்க மாட்டேன்: நீதிபதி பி.ஆர்.கவாய்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசு பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளேன் என்று கூறினார்.
- 4 Jun 2025 9:42 AM IST
அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, 2025 மே மாதம் மட்டும், 7,74,493 பேர் ஆன்லைன் புக்கிங் மூலம் பயணம் செய்துள்ளனர்.
- 4 Jun 2025 9:41 AM IST
கோப்பையுடன் வீதி உலா செல்லும் பெங்களூரு அணி
18 ஆண்டுகளாக தவமிருந்து கைப்பற்றிய ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூருவில் இன்று வீதி உலா செல்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பிற்பகல் 3.30 மணிக்கு விதானா சவுதா பகுதியில் தொடங்கி, சின்னச்சாமி மைதானத்தில் நிறைவு பெறுகிறது.









