இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 May 2025 8:58 AM IST
'உசுரே நீதானே...': ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ்- வைரலாகும் வீடியோ
நேற்று மும்பையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனுஷும் கலந்துகொண்டிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து 'ராயன்' படத்தில் வரும் 'உசுரே நீதானே...' பாடலை தனுஷ் பாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 5 May 2025 8:57 AM IST
அனுமதி பெற்றே பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்- சி.ஆர்.பி.எப். வீரர் விளக்கம்
அனுமதி பெற்றே பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர் விளக்கம் அளித்துள்ளார்.
- 5 May 2025 8:56 AM IST
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு - ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்,'பிரதமர் மோடியையும், அவரது பணி ஸ்டைலும் மக்களுக்கு நன்கு தெரியும். அவரது உறுதிப்பாடும், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொண்ட விதத்தையும் மக்கள் அறிவர். எனவே பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது நிச்சயம் நடக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
- 5 May 2025 8:55 AM IST
நிர்வாண கோலத்தில் தெருவில் நடந்து சென்ற இளம்பெண்; பெங்களூருவில் பரபரப்பு
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பரபரப்பு நிறைந்த எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கண்களை மூடி கொண்டனர். ஆனால், அவர் பதற்றமின்றி நடந்து சென்று விட்டு, திரும்புகிறார்.
- 5 May 2025 8:52 AM IST
தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம்
காஷ்மீர் - பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக சார்பில் கோவையில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5 May 2025 8:51 AM IST
கோவில் திருவிழாவில் நடனம் ஆடும்போது தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை
கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 5 May 2025 8:50 AM IST
வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..?: ஐதராபாத் - டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐதராபாத்தில் இன்று நடக்கும் 55வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
- 5 May 2025 8:49 AM IST
தமிழ் வார விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நிறைவு விழா
தமிழ் வார விழாவின் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
- 5 May 2025 8:47 AM IST
மேஷம்
கணினித் துறையில் உள்ளவர்களுக்கு தங்கள் வேலையில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். மூத்த சகோதரர் மூலம் தங்களுக்கு நன்மை விளையும். விவசாயிகளின் கனவு நிறைவேறும். பெரியவர்கள் வெளியே செல்லும்போது மற்றவர்கள் துணையின்றி செல்வதை தவிர்ப்பது நல்லது. தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்















