இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Jun 2025 6:25 PM IST
பாடத்திட்டத்தை தமிழில் தர மறுப்பது ஏன்?: அமித் ஷா
தமிழ்நாட்டில் தமிழ், தமிழ் எனப்பேசும் நீங்கள், பாடத் திட்டத்தை தமிழில் தர மறுப்பது ஏன்? தமிழ்நாட்டில் உயர்கல்வி பாடத்திட்டம் உடனடியாக தமிழில் இயற்றப்பட வேண்டும். தமிழக மரபு சின்னமான செங்கோலை, உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்ற மோடிக்கு நன்றி என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
- 8 Jun 2025 5:14 PM IST
தமிழகத்தில் மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை - அண்ணாமலை
கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக. முதியோர்கள் கொலை, சாதிய கொலை, கூலிப்படை கொலை என மக்கள் தமிழகத்தில் எங்கும் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சியை அகற்றவே அமித் ஷா வருகை .உலகில் மிக வேகமாக வறுமையை ஒழித்த நாடு இந்தியா அதை செய்தவர் பிரதமர் மோடி. என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- 8 Jun 2025 4:47 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
- 8 Jun 2025 4:40 PM IST
சென்னையில் மழை
காலையில் இருந்து கடும் வெயில் கொளுத்திய |நிலையில் மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர், மெரினா, ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
- 8 Jun 2025 4:32 PM IST
அரசியலில் விஜய் வெற்றி பெற முடியாது: துரை வைகோ
2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு. ஜூன் 22இல் மதிமுக பொதுக்குழு கூடுகிறது. தேர்தல் வியூகம் பற்றி முடிவு எடுக்கப்படும். சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்து அரசியலில் விஜய் வெற்றி பெற முடியாது என்று துரை வைகோ கூறியுள்ளார்.
- 8 Jun 2025 3:32 PM IST
தஞ்சை பெரிய கோயில் அருகே பயன்பாட்டில் இல்லாத பழைய மின் கம்பம் விழுந்து, இளநீர் குடிக்க வந்த சுப்ரமணியன் (56) என்பவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது
- 8 Jun 2025 2:48 PM IST
வாணியம்பாடி அருகே சிறுவன் புகை பிடிப்பது போல் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர் எடுத்த வீடியோவை வெளியிட சொன்ன ஆயுதப்படை காவலர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
- 8 Jun 2025 1:55 PM IST
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
- கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது.
- புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய்க்கு அப்போதும் வாழ்த்து சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்.
- கூட்டணி குறித்து இன்னும் 2,3 மாதங்களில் தெரிந்து விடும்.
- அனைவரும் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான செய்தி வரும்.
- குருமூர்த்தியை தைலாபுரத்திலும் சந்தித்தேன். சென்னையில் சந்தித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 8 Jun 2025 12:50 PM IST
- ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு
- சென்னை அபிராமபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு
- பாமகவின் இளைஞரணி தலைவராக ராமதாஸால் நியமிக்கப்பட்டு பின் அந்தப்பொறுப்பை ராஜினாமா செய்தவர் முகுந்தன்
- முகுந்தனுக்கு கொடுக்க கட்சியில் நிறைய பெரிய பதவிகள் இருந்தும் அவர் தொழில் செய்யவே விரும்புகிறார் என ராமதாஸ் பேசியிருந்தார்