இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Jun 2025 11:37 AM IST
நெல்லை அருகே மனித தலையுடன் சாமியாடிய பக்தர்களால் பரபரப்பு
நெல்லை,
நெல்லை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பக்தர்கள் சாமியாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், நள்ளிரவில் சாமக்கொடைக்கு சென்று விட்டு கோவிலுக்கு திரும்பி வந்த பக்தர்கள் சிலர், பாதி எரிந்த நிலையில் உள்ள மனித தலை, கை, கால் போன்ற உறுப்புகளை வைத்து கொண்டு ஆவேசமாக சாமியாடினர். இதனை அங்குள்ள மக்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த வீடியோ எந்த கோவிலில், எப்போது பதிவு செய்யப்பட்டது? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 8 Jun 2025 11:06 AM IST
சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். 2026- தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்- எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை






