இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Oct 2025 2:44 PM IST
இந்தியரை சிறைபிடித்த உக்ரைன் ராணுவம்?
ரஷிய ராணுவத்திற்காக உக்ரைனில் களமிறக்கப்பட்ட 22 வயது இந்தியரை சிறை பிடித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த நபர் குஜராத்தைச் சேர்ந்தவர் என உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில். அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
- 8 Oct 2025 2:41 PM IST
மள மள என உயரும் தங்கம் விலை; இன்று மாலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080க்கு விற்பனை செய்யப்படுகிறது, காலையில் சவரனுக்கு 800 ரூபாயும் தற்போது மேலும் 680 ரூபாய் உயர்ந்து ரூ.91.080க்கு விற்பனை செய்யப்படுகிறது. - 8 Oct 2025 1:53 PM IST
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
- 8 Oct 2025 1:51 PM IST
வேதனையில் இருந்து மீள முடியவில்லை; நீதிக்கான முன்னெடுப்பு நெடியது - ராஜ்மோகன்
என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
- 8 Oct 2025 1:48 PM IST
மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா புகார்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார்.
வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக, ஜாய் கிரிஸில்டா அந்த புகாரில் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 8 Oct 2025 1:37 PM IST
ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடிய பொதுமக்கள்.. பயங்கர தாக்குதல் நடத்திய மியான்மர் ராணுவம் - 40 பேர் பலி
மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடிய மக்கள் மீது வெடிகுண்டுகள் வீசி அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. ராணுவம் நடத்திய இத்தாக்குதலில், 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகாவும் தகவல் வெளியாகி உள்ளது.
- 8 Oct 2025 1:27 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: “இன்று ஒரு கருப்பு நாள்” - அன்புமணி ராமதாஸ்
குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்று அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
- 8 Oct 2025 1:07 PM IST
பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? - அமைச்சர் கே.என்.நேரு கேள்வி
பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? என அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பி உள்ளார்.
- 8 Oct 2025 1:06 PM IST
வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் 2 நிமிடம் நின்று செல்லும்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டது.
- 8 Oct 2025 1:04 PM IST
கரூர் செல்ல அனுமதி கோரிய விஜய்.. டிஜிபி அலுவலகத்தில் மனு
கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது


















