இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Oct 2025 9:40 AM IST
நவிமும்பை விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் மும்பை வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- 8 Oct 2025 9:39 AM IST
பீகார் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை
பீகாரில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
- 8 Oct 2025 9:37 AM IST
பாகிஸ்தானில் தண்டவாளம் அருகே குண்டுவெடிப்பு - எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டதால் பரபரப்பு
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி குழு தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
- 8 Oct 2025 9:28 AM IST
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை: "எந்த உச்சத்தை தொடுமோ..?" விழிபிதுங்கும் மக்கள்
தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்து 600-க்கு நேற்று விற்பனையானது.
- 8 Oct 2025 9:27 AM IST
நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
- 8 Oct 2025 9:21 AM IST
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள்.. என்னென்ன தெரியுமா..?
அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
- 8 Oct 2025 9:19 AM IST
ராசிபலன் (08-10-2025): இந்த ராசி பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்
கன்னி
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்ச்















