இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Jan 2026 1:41 PM IST
ஆஸ்கர் ரேஸில் காந்தாரா சாப்டர் 1.. இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமா என எதிர்பார்ப்பு
சிறந்த திரைப்படப் பிரிவு மட்டுமின்றி, சிறந்த நடிகர் உள்ளிட்ட பிற பிரிவுகளிலும் இந்தப் படம் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 9 Jan 2026 1:39 PM IST
மத்தியபிரதேசம்: கார் விபத்தில் முன்னாள் மந்திரியின் மகள் உள்பட 3 பேர் பலி
மத்தியபிரதேசம் ராஜ்பூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். இவர் மத்தியபிரதேசத்தின் உள்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் மந்திரி பாலா பச்சனுக்கு பிரேர்னா பச்சன் என்ற மகள் இருந்தார். இந்நிலையில், பிரேர்னா பச்சன் நேற்று இரவு தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுள்ளார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது.
- 9 Jan 2026 1:36 PM IST
கரூர் சம்பவம்: 12-ந்தேதி சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்
சிபிஐ-யின் சம்மனை ஏற்று விஜய் வரும் 12-ம் தேதி சி.பி.ஐ. முன் ஆஜராக உள்ளார். இதற்காக விஜய் வருகிற 11-ந்தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- 9 Jan 2026 1:33 PM IST
பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு
இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் சூரியமூர்த்தி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- 9 Jan 2026 1:07 PM IST
பிரான்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
6 நாட்கள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரான்ஸ், லக்சம்பர்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- 9 Jan 2026 1:05 PM IST
பராசக்தி படத்திற்கு முன்பதிவு தொடங்கியது
சென்னை, திருவள்ளூரில் உள்ள திரையங்குகளில் பராசக்தி படத்திற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பராசக்தி படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்று கிடைத்ததை அடுத்து திரையரங்குகள் முன்பதிவை தொடங்கி உள்ளன.
- 9 Jan 2026 12:49 PM IST
"பராசக்தி" படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்.. திட்டமிட்டபடி நாளை வெளியாகும்
இந்த நிலையில், கோர்ட்டில் உத்தரிவின் பேரில் தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது .நாளை (ஜன.10) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று (ஜன.9) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
- 9 Jan 2026 12:46 PM IST
தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக உயர்த்தியுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சாதனை செய்தால், அதை முறியடிக்க முடியாத சாதனையாக செய்வதே என் கொள்கை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- 9 Jan 2026 12:45 PM IST
அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்: தொண்டர்கள் உற்சாகம்
இந்த நிலையில். அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த நேர்காணலில், சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு. ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார்.
- 9 Jan 2026 12:42 PM IST
சென்னையில் 15-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 15-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
















