இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025


இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
x
தினத்தந்தி 9 April 2025 9:44 AM IST (Updated: 9 April 2025 8:18 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சென்னை


Live Updates

  • 9 April 2025 4:59 PM IST

    பெரம்பலூரில் அரசு மதுபான கடையை இடம் மாற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். இதுபற்றி உடனடியாக ஆய்வு செய்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், மதுபான கடையை இடம் மாற்றவும், தள்ளுவண்டி கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். கலெக்டர் உறுதி அளித்த நிலையில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  • 9 April 2025 4:51 PM IST

    செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

    ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர் என நீதிபதி கேட்டதற்கு, அதுபற்றிய தரவுகளை தெரிவிக்க காலஅவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்தது.

    குற்றப்பத்திரிகை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட கோர்ட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது. ஏப்ரல் 20-ந்தேதி ஜாமீன் உத்தரவாத தொகையாக தலா ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

  • 9 April 2025 3:35 PM IST

    தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து உள்ளது. இதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.67,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • 9 April 2025 3:30 PM IST

    திரு.குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

  • 9 April 2025 2:32 PM IST

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டசபை இன்று நடந்தபோது, ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மெஹ்ராஜ் மாலிக் மீது சில உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டசபையில் இருக்கையின் மீது அவர் ஏறி நின்று கோஷம் எழுப்பினார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர் என அப்போது அவர் குற்றச்சாட்டாக கூறினார். அதன்பின்னர் இருக்கையில் இருந்து கீழே இறங்கினார். அவருக்கு ஆதரவாக கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவையில் எழுந்து நின்றனர்.

  • 9 April 2025 2:04 PM IST

    பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

    மே 9-ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் 80-வது ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

  • 9 April 2025 2:03 PM IST

    4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 9 April 2025 2:01 PM IST

    தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆஜர்

    தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஆஜர்.

  • 9 April 2025 12:59 PM IST

    குமரி அனந்தன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தந்தையின் உடல் அருகில் நின்ற தமிழிசை சவுந்தரராஜனின் கைகளை பிடித்து எடப்பாடி ஆறுதல் தெரிவித்தார்.

  • 9 April 2025 12:52 PM IST

    காஞ்சிபுரத்தில் புதிய ஆலை அமைக்கும் டிக்ஸன் நிறுவனம்

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் நிறுவனத்துக்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ரூ.1,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் அமைக்கப்பட உள்ள டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆலை மூலமாக மடிக்கணினி, ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story