இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Aug 2025 7:13 PM IST
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- 9 Aug 2025 7:12 PM IST
திருச்சியில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
லால்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த சிற்றுந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 9 Aug 2025 6:01 PM IST
இன்ஸ்டகிராமில் இந்த வசதியை பார்த்தீங்களா? மூன்று புதிய அப்டேட்களை வெளியிட்ட மெட்டா
இன்ஸ்டா தனது பயனர்களை கவருவதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது புதிதாக மூன்று அப்டேட்களை இன்ஸ்டகிராம் கொண்டு வந்துள்ளது.
அதாவது எக்ஸ் தளத்தில் இருப்பது போல ரீல்ஸ்களை ரீபோஸ்ட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, பயனர்களுக்கு இடையே தொடபுர்புகளை மேம்படுத்தும் விதமாக இண்டரக்டிவ் மேப், பிரண்ட்ஷிப் டேப் ஆகிய வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.
- 9 Aug 2025 5:39 PM IST
குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆயிரம் பராமரிக்க வேண்டும்: ஐசிஐசிஐ வங்கி கொடுத்த அதிர்ச்சி
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான ஐசிஐசிஐ, குறைந்தபட்ச இருப்புத்தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
- 9 Aug 2025 5:28 PM IST
60 எம்எல்ஏக்கள் கிடைத்தால் பாமக ஆட்சி; உங்களது விருப்பப்படி கூட்டணி அமையும் 60 எம்எல்ஏக்கள்கிடைத்துவிட்டால் பாமக ஆட்சிதான். மெகா கூட்டணி அமைத்து, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்வோம் - அன்புமணி
- 9 Aug 2025 3:57 PM IST
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 9 Aug 2025 3:31 PM IST
பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. நாளை பூம்புகாரில் நடைபெறும் மாநாட்டிற்கு வாருங்கள்’ என்றார்.









