இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Nov 2025 2:24 PM IST
அதிக முறை ஆண்ட திராவிடக் கட்சி அதிமுக தான் - ராஜேந்திர பாலாஜி
விருதுநகரில் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஜனவரிக்கு பிறகு பல கட்சிகள்,அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தரும். எந்தவொரு பிரச்சினை என்றாலும் களத்தில் நிற்பது அதிமுகதான். மற்றவர்கள் கருத்துக்கு இதில் இடமில்லை. அதிமுக தொண்டர்களின் கருத்துகளை உள்வாங்கி எடுக்கும் முடிவாக பழனிசாமியின் முடிவு உள்ளது என்றார்.
- 10 Nov 2025 1:07 PM IST
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவது இயல்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்
- 10 Nov 2025 10:27 AM IST
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் எடுபடாது: மு.க ஸ்டாலின்
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் எடுபடாது: நம் எதிரிகள் புதிய வழிகள் மூலம் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்க்க கூட முடியாத நிலையில் அதிமுக உள்ளது. எஸ்.ஐ.ஆர் குறித்து அக்கறை இருந்திருந்தால் முன்கூட்டியே வழக்கு தொடர்ந்து இருக்கலாம். எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்து திமுகவை அழித்துவிடலாம் என எதிரிகள் நினைக்கிறார்கள். டெல்லியில் இருக்கக் கூடிய பிக் பாஸுக்கு எடப்பாடி பழனிசாமி ‘ஆமாம் சாமி’ போட்டுத்தான் ஆக வேண்டும் – ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டி இல்ல திருமணவிழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
- 10 Nov 2025 10:11 AM IST
நடிகை திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது













