புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Nov 2025 12:58 PM IST (Updated: 10 Nov 2025 2:46 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார்.

கீரனூர் அருகே களமாவூரில் முகாம்பிகை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார், ஆக மொத்தம் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

* அறந்தாங்கியில் இருக்கக்கூடிய வீர கொண்டான் ஏரி ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

* கீரமங்கலம் விவசாயிகள் நலன் கருதி, அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை சேமிக்க ரூ. 1.16 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

* வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.

* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.

* கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

* பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

1 More update

Next Story