இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Oct 2025 1:57 PM IST
518 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 318 ரன்கள் எடுத்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 129* ரன்களும், சாய் சுதர்ஷன் 87 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வாரிகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 11 Oct 2025 1:55 PM IST
காதலியுடன் புதிய அத்தியாயம்... உறுதிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனால் அவருடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது என பாண்ட்யா உறுதிப்படுத்தி உள்ளார்.
- 11 Oct 2025 1:46 PM IST
4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
திருவாரூர், நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (அக்.11ந்தேதி) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாகவும், சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 11 Oct 2025 1:37 PM IST
டெல்லியில் ஆப்கானிஸ்தான் மந்திரி நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை... மத்திய அரசு விளக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. தலீபான் அரசின் வெளியுறவு மந்திரியாக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில், அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் பற்றி பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், டெல்லியில் அவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது முத்தகி, பெண்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- 11 Oct 2025 12:55 PM IST
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்-அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, காலை உணவுத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11 Oct 2025 12:52 PM IST
டெல்லி புறப்பட்ட விமானம் மீது மோதிய பறவைகள் - அவசர அவசரமாக தரையிறக்கம்
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவைகள் மோதின. இதையடுத்து சாதுரியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
- 11 Oct 2025 12:51 PM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்
ஆட்டத்தின் 2வது நாளான இன்று ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார்.
- 11 Oct 2025 12:47 PM IST
தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
கரூரில் நடந்த தவெக பரப்புரைக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் பார்த்திபன். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பரப்புரை நிகழ்வில் பார்த்திபனின் பங்கெடுப்பு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும் விஜய் பிரசார நிகழ்ச்சிக்காக சவுண்ட் சர்வீஸ் அமைத்துக் கொடுத்த ஆடியோ இன்ஜினியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 11 Oct 2025 12:46 PM IST
டெல்லி புறப்பட்ட விமானம் மீது மோதிய பறவைகள் - அவசர அவசரமாக தரையிறக்கம்
மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை ஆகாசா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
- 11 Oct 2025 12:26 PM IST
சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு
சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.


















