காதலியுடன் புதிய அத்தியாயம்... உறுதிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா

பாண்ட்யா, அவருடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது என உறுதிப்படுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவருடைய முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச். ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் 2020-ல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் அவர்கள் இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில், மாடல் அழகியான மஹீகா சர்மாவுடன் பாண்ட்யா ஒன்றாக சுற்றி திரிகிறார் என்று பரவலாக தகவல் வெளியானது. ஆனாலும், இந்த ஜோடி இதனை உறுதிப்படுத்தவில்லை. அவர்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு செல்லும்போது, நிருபர்களை தவிர்த்து வருகின்றனர். பேட்டி கொடுப்பதோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கோ அவர்கள் அனுமதிப்பதில்லை.
பாண்ட்யாவுக்கு இன்று 32-வது பிறந்த நாள் வருகிறது. இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனால் அவருடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது என அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.






