இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Nov 2025 11:32 AM IST
இந்த வார விசேஷங்கள்: 11-11-2025 முதல் 17-11-2025 வரை
இந்த வார விசேஷங்கள்
11-ந் தேதி (செவ்வாய்)
* திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கருட வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம்.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
- 11 Nov 2025 11:29 AM IST
போதைப்பொருள் விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜர்
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
- 11 Nov 2025 11:27 AM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
- 11 Nov 2025 11:10 AM IST
பாதி ஆண், பாதி பெண் உடலைக் கொண்ட அரிய சிலந்தி கண்டுபிடிப்பு
தாய்லாந்தில் பாதி ஆண் மற்றும் பாதி பெண் உடல்தோற்றத்துடன் புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய சிலந்தியின் உடல் இரண்டு பாலினமாக சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் திகைத்துள்ளனர். இந்த சிலந்திக்கு Damarchus inazuma என பெயரிடப்பட்டுள்ளது.
- 11 Nov 2025 11:03 AM IST
கார் வெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ நிலையம் மூடல்
கார் வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணை நடைபெறுவதால், போலீசார் அறிவுறுத்தல்படி மூடப்பட்டுள்ளது. டெல்லியில் பிற மெட்ரோ சேவைகள் வழக்கம்போல தடையின்றிச் செயல்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- 11 Nov 2025 10:58 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பயங்கரவாத தாக்குதலா..? வெளியான பரபரப்பு தகவல்
கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- 11 Nov 2025 10:18 AM IST
டெல்லி செங்கோட்டைக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 9 பேர் பலியான சம்பவத்தை தொடந்து செங்கோட்டைக்கு 3 நாட்கள் தொல்லியல் துறை விடுமுறை அறிவித்தது
- 11 Nov 2025 10:14 AM IST
பீகார் 2ஆம் கட்ட தேர்தல் - 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குப்பதிவு
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 11 Nov 2025 10:03 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: - வெளியானது நடுங்கவிடும் சிசிடிவி காட்சி
டெல்லி கார் வெடிப்பில் சம்மந்தப்பட்ட காரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 11 Nov 2025 10:02 AM IST
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
















