இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Nov 2025 9:58 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர், உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
- 11 Nov 2025 9:51 AM IST
பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- 11 Nov 2025 9:49 AM IST
மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்றும் தங்கம் விலை அதிகரித்து உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.220 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 700-க்கும், ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 11 Nov 2025 9:48 AM IST
நடுங்கி அடங்கியது டெல்லி; அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு - கவிஞர் வைரமுத்து
டெல்லி சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அறமே செய்க என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
- 11 Nov 2025 9:47 AM IST
ஐ.பி.எல்.: சாம்சனுக்காக ஜடேஜாவை தோனி... - இந்திய முன்னாள் வீரர்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
- 11 Nov 2025 9:44 AM IST
2 நாள் பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி
பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சுலந்து கொள்கிறார்.
- 11 Nov 2025 9:42 AM IST
நேற்று (10-11-2025) மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
- 11 Nov 2025 9:39 AM IST
ராசிபலன் (11.11.2025): பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் முடிவாகும்..!
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை: செவ்வாய் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: ஐப்பசி
நாள்: 25
ஆங்கில தேதி: 11
மாதம்: நவம்பர்
வருடம்: 2025
நட்சத்திரம்: இன்று அதிகாலை 01-40 வரை புனர்பூசம் பின்பு பூசம்
திதி: இன்று காலை 07-06 வரை சஷ்டி பின்பு சப்தமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 07-45 to 8-45
நல்ல நேரம்: மாலை 4-45 to 3-00














