இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Oct 2025 7:41 PM IST
பீகாரில் என்.டி.ஏ தொகுதிப் பங்கீடு நிறைவு
பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101ல் போட்டி என தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி 29 தொகுதிகளிலும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா, ராஸ்ட்ரிய லோக் மோர்சா கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- 12 Oct 2025 7:39 PM IST
பீகாரில் மீண்டும் நிதிஷ் ஆட்சி அமையும் - சஞ்சய் குமார் ஜா உறுதி
பீகார் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று நிதிஷ் குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக உள்ளன ஜேடியு பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டி என அறிவித்து ஜேடியு மூத்த தலைவர் சஞ்சய் குமார் ஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
- 12 Oct 2025 7:20 PM IST
மகளிர் உலகக்கோப்பை - ஆஸி.,க்கு 331 ரன்கள் இலக்கு
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 330 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
- 12 Oct 2025 7:19 PM IST
காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லை : தச்சநல்லூர் காவல் நிலையத்தின் மீது பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள். காவல் நிலையத்தின் 2 பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சிசிடிவி அடிப்படையில் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 12 Oct 2025 7:17 PM IST
டெல்லி டெஸ்ட் - 3ம் நாள் ஆட்டம் நிறைவு
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டி; 3ம் நாள் ஆட்ட முடிவில் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியாவை விட வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்கள் பின் தங்கி உள்ளது,கேம்ப்பெல்(87), ஷாய் ஹோப் (66) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- 12 Oct 2025 5:39 PM IST
தலீபான் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 23 பேர் பலி -பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. 58 பாக். வீரர்கள் கொல்லப்பட்டதாக தலீபான் அரசு அறிவித்த நிலையில், 200க்கும் மேற்பட்ட தலீபான்களை கொன்றதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.
- 12 Oct 2025 5:16 PM IST
பீகார் தேர்தல் - இரண்டாவது நாளாக பாஜக ஆலோசனை
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்கள் 2-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 12 Oct 2025 5:12 PM IST
தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- 12 Oct 2025 4:50 PM IST
உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
சென்னை: விபத்து, மாரடைப்பு மற்றும் உடல் நலக் குறைவால் உயிரிழந்த கண்டைனர் லாரி ஓட்டுநர்கள் 6 பேரின் குடும்பங்களுக்கு, வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.26.44 லட்சம் நிதி திரட்டி சக ஓட்டுநர்கள் வழங்கி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் பணம் அனுப்பி உதவியுள்ளனர். மொத்தப் பணத்தை 6 பேருக்கு பிரித்து, அவர்களது குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
- 12 Oct 2025 4:47 PM IST
ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை -அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
தீபாவளிக்கு கூடுதல் கட்டணம் அறிவித்துள்ள ஆம்னி பேருந்துகள் நாளைக்குள் கட்டணத்தை குறைக்காவிட்டால், அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.



















