இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Oct 2025 4:40 PM IST
திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திருச்சி என்.எஸ்.பி சாலை, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மக்கள் குவிந்துள்ளனர்.
- 12 Oct 2025 4:38 PM IST
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சாத்தனூர் அணையில் இருந்து 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி எல்லையோரமுள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொமந்தான்மேடு, சித்தேரி அணைக்கட்டு தரைப் பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
- 12 Oct 2025 3:41 PM IST
திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் கைது
திண்டுக்கல் மாவட்டச் தவெக செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்தது காவல்துறை . நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நிர்மல்குமாரை சாணார்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 Oct 2025 3:37 PM IST
58 பாகிஸ்தான் வீரர்கள் பலி
ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் நடந்த பயங்கர தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். ஆப்கன் படைகள் 25 பாக்., ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 12 Oct 2025 1:53 PM IST
தவெகவினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் விமர்சனம் செய்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டு, பொதுக்கூட்டத்திற்கு வந்து ஆதரவு கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே விமர்சனம் செய்கின்றனர். அவர்களால் பொறுக்க முடியவில்லை.
திமுக கூட்டணியில் விரிசல் இப்போதே தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை, எங்கள் கூட்டணி சுதந்திரமானது. அதிமுக கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தேவையற்ற விமர்சனம் செய்கின்றனர்” என்று கூறினார்.
- 12 Oct 2025 1:34 PM IST
ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே திருமணம் செய்துகொண்ட இளையமகன் அஜித்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் திருமணம் நடைபெற்றது.
- 12 Oct 2025 1:32 PM IST
ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானின் 3 ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளோம் என ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.
- 12 Oct 2025 1:31 PM IST
குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்களில் ஆல் அவுட்
பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 41 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா தற்போது வரை 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 12 Oct 2025 1:29 PM IST
எகிப்தில் கார் விபத்து: கத்தார் அதிபர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- 12 Oct 2025 1:04 PM IST
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு
பொற்கோவிலில் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையாக ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.



















