இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Dec 2025 8:48 AM IST
"சினிமாவின் சிகரம்"… பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவது பிறந்தநாளையொட்டி ‘படையப்பா' படம் இன்று மீண்டும் ரிலீசாகி இருக்கிறது.
- 12 Dec 2025 8:47 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: தனிநீதிபதி உத்தரவுக்கு எதிரான மனு இன்று விசாரணை
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன். கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது. மேலும் தலைமைச் செயலாளரை ஆஜராக பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.
- 12 Dec 2025 8:46 AM IST
தவெக தலைவர் விஜய்யின் கட்சி சின்னம் இதுவா..? - வெளியான பரபரப்பு தகவல்
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
- 12 Dec 2025 8:45 AM IST
புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு நேரு விளையாட்டரங்களில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
- 12 Dec 2025 8:42 AM IST
இன்றைய ராசிபலன் (12-12-2025): பணம் கையில் சரளமாக புழங்கும் நாள்..!
கும்பம்
அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்














