இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
x
தினத்தந்தி 14 Feb 2025 9:26 AM IST (Updated: 14 Feb 2025 7:54 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 14 Feb 2025 11:28 AM IST

    சென்னையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதே நோக்கம். 136 நகரங்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • 14 Feb 2025 10:51 AM IST

    புதுச்சேரி ரெயின்போ நகரில் 2 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டிக்கொல்லப்பட்ட ரிஷி பிரபல தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 14 Feb 2025 10:44 AM IST

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. 1 சவரன் ரூ.63,920க்கும், ஒருகிராம் ரூ.7,990க்கு விற்பனை ஆகிறது.

  • 14 Feb 2025 10:42 AM IST

    திருச்செந்தூர்: மனப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியொன்றில், இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குலசேகரன்பட்டினம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 14 Feb 2025 10:40 AM IST

    அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம்தான் காரணம் என கூறினேன். துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஆர்.பி. உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை. நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது செங்கோட்டையன் கூறியுள்ளார். 

  • 14 Feb 2025 10:19 AM IST

    ராமநாதபுரம் அருகே அரசு பஸ்சும் காரும் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • 14 Feb 2025 9:55 AM IST

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை அனுப்பி வைக்கும் 2-வது விமானம் நாளை இந்தியா வர உள்ளது.

  • 14 Feb 2025 9:50 AM IST

    பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக அவர் தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • 14 Feb 2025 9:27 AM IST

    சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார்.

  • 14 Feb 2025 9:27 AM IST

    பெரம்பலூரில் 3 பெண்களை காதலித்து ஏமாற்றிய `கில்லாடி' இளைஞரை முதல் மனைவி கொடுத்த புகாரில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story