இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025


இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
x
தினத்தந்தி 15 April 2025 8:52 AM IST (Updated: 22 Jun 2025 1:50 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 15 April 2025 3:06 PM IST

    திபெத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. திபெத் பீடபூமியானது, டெக்டோனிக் தட்டுகளின் மோதலால் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக அறியப்படுகிறது.

  • 15 April 2025 1:47 PM IST

    அதிமுக வெளிநடப்பு செய்தது கவலை அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மாநில சுயாட்சி குறித்த இந்த விவாதத்தின் மீது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கருத்து சொல்லாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது கவலை அளிக்கிறது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருமே தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுத்தர முடியாது என்று கூறி, திமுக அரசின் சில நிலைப்பாடுகளுக்கு ஆதரவு தந்துள்ளனர் அதிமுகவின் தற்போதைய நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. ‘கொள்கை வேறு கூட்டணி வேறு’ என்று கூறுவார்கள். இதுதான் அவர்களின் கொள்கையா? என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

  • 15 April 2025 1:44 PM IST

    முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி

    நாமக்கல்லில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நடப்பதாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மீது சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி முட்டைகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விலை நிர்ணயம் தொடர்பாக சிறு பண்ணையாளர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை எனக்கூறி, சங்க அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • 15 April 2025 1:43 PM IST

    கவர்னரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்

    கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 15 April 2025 1:35 PM IST

    நெல்லையப்பர் கோவில் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

    நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான 7,500 ஏக்கர் நிலங்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு உள்துறை, வருவாய் துறை செயலர்கள், அறநிலைய துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

  • 15 April 2025 11:45 AM IST

    பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து

    நெல்லையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலில் பள்ளி வகுப்பறையிலேயே கத்திக்குத்து

    படுகாயமடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி,

    சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை

  • 15 April 2025 11:12 AM IST

    அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்" மாநில உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்படுகிறது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

    அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும், மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது

    - முதலமைச்சர் ஸ்டாலின்  சட்ட சபையில் பேச்சு

  • 15 April 2025 10:48 AM IST

    தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை எனக்கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

  • 15 April 2025 10:42 AM IST

    மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

  • 15 April 2025 10:07 AM IST

    விருதுநகர், காரிசேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருப்பதி, லலிதா,பாக்கியம் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

1 More update

Next Story