இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
x
தினத்தந்தி 22 Sept 2025 9:10 AM IST (Updated: 23 Sept 2025 9:01 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 22 Sept 2025 9:18 AM IST

    தீபாவளி பண்டிகை: திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தீவிரம்

    ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். உள்நாட்டு ஆடை வர்த்தகத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடியில், ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம், தீபாவளி பண்டிகைகால ஆர்டர்களாக இருக்கிறது.

    கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை, டில்லி வரை முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.

  • 22 Sept 2025 9:14 AM IST

    காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story