இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Sept 2025 12:39 PM IST
பொதுமக்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயருகிறது
ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 24 Sept 2025 12:37 PM IST
இந்தியாவை நமது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்க முடியும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
- 24 Sept 2025 12:35 PM IST
'பொன்னியின் செல்வன்' பட பாடல் விவகாரம்: ஏ.ஆர் ரகுமானுக்கு எதிரான உத்தரவு ரத்து
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் 'வீர ராஜ வீரா' என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட 'சிவ ஸ்துதி' பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்ஷன் மீது காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்து இருந்தார்.
- 24 Sept 2025 12:08 PM IST
தவெகவினர் வெளியிட்ட வீடியோ- பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் சார்பில் பள்ளியை சுத்தம் செய்ததாக வீடியோ வெளியிட்ட நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- 24 Sept 2025 12:07 PM IST
கவுரவ விரிவுரையாளர்கள் பணி: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கோ.வி.செழியன் அறிவிப்பு
மாணாக்கர்களின் கல்வி சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் 2025-26ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (24.09.2025) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
- 24 Sept 2025 11:47 AM IST
ஈகுவேடார் சிறையில் கலவரம்: 14 பேர் பலி; 14 பேர் காயம்
ஈகுவேடார் நாட்டில் குவயாகுவில் நகருக்கு தெற்கே துறைமுக நகரான மச்சலா என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.
- 24 Sept 2025 11:45 AM IST
விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
எஸ்.ஐ. மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- 24 Sept 2025 11:33 AM IST
இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 'ஏ' 420 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்கள்சாம் கான்ஸ்டாஸ் 49 ரன்கள் எடுத்தனர்.இந்தியா தரப்பில் மனவ் சுதர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
- 24 Sept 2025 11:27 AM IST
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வெளியான தகவல்
வண்டலூர் ரயில் நிலையத்தை அடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக மேலும் தாமதம் ஏற்பட்டது.
- 24 Sept 2025 11:25 AM IST
ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக அஜித்குமார் ரேஸிங் அணி அறிவிப்பு
அஜித்குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லெமன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது.
















