இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Sept 2025 11:21 AM IST
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுகிறது.
- 24 Sept 2025 11:19 AM IST
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்க தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் அழைப்பு விடுத்தார்
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இவ்விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 24 Sept 2025 11:13 AM IST
தூத்துக்குடியில் ரூ.1156 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலை அமைக்கும் ரிலையன்ஸ் குழுமம்
தூத்துக்குடியில் அல்லிகுளம் சிப்காட்டில் ரூ.1156 கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் குழுமம் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தின்பண்டங்கள், மசாலா, எண்ணெய் வகை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை 60 ஏக்கரில் அமைகிறது. இதன் மூலம் உள்ளூரைச் சேர்ந்த 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- 24 Sept 2025 11:08 AM IST
பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி தண்டர் அணியில் விளையாடும் அஸ்வின்
சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணி நிர்வாகங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தின.
- 24 Sept 2025 11:07 AM IST
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிறு தொடர்பான பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- 24 Sept 2025 11:02 AM IST
எச்.வி.ஹண்டே உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது பாஜகவிலும் உள்ள எச்.வி.ஹண்டேவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
அரசின் திட்டங்களை பாராட்டி எச்.வி.ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதிய நிலையில், சென்னை செனாய் நகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
- 24 Sept 2025 10:49 AM IST
ஜிஎஸ்டி வரி குறைப்பு - கார் விற்பனையில் புதிய சாதனை
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 22ம் தேதி ஒரே நாளில் மாருதி சுசுகி நிறுவனம், 32,000 கார்கள் விற்பனை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஹூண்டாய் நிறுவனம் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 24 Sept 2025 10:42 AM IST
உ.பி.: தேடப்படும் குற்றவாளியை சுற்றி வளைத்து... பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்
ஜிதேந்திராவை பெண் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று நேற்றிரவு என்கவுன்ட்டர் செய்து பிடித்துள்ளது. பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும்.
- 24 Sept 2025 10:40 AM IST
கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது: 20 தொழிலாளர்களின் கதி என்ன?
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களில் ஆபத்தான முறையில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது.
- 24 Sept 2025 10:39 AM IST
தைவானை புரட்டி போட்ட ரகசா புயல்: ஏரி, பாலம் உடைந்து 14 பேர் பலி; 124 பேர் மாயம்
தைவானில் ஏரி உடைந்து. கிராமம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து. குடியிருப்புவாசிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பரிதவித்து வருகின்றனர்.
















