இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Feb 2025 5:03 PM IST
டெல்லியில் 2021-2022 கலால் கொள்கையின்படி, அரசுக்கு மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக நிதியிழப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய தணிக்கை அறிக்கை தெரிவிக்கின்றது.
- 25 Feb 2025 4:47 PM IST
தமிழ்நாட்டில் ஜாக்டோ ஜியோவின் போராட்டத்தால் 48 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 51 பள்ளிகளில் மாற்று ஏற்பாடாக தற்காலிக ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 25 Feb 2025 4:44 PM IST
தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததன் தொடர்ச்சியாக, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 25 Feb 2025 4:37 PM IST
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் கடுமையான பனி வீசுவதால் வாழைத்தார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவால் அனைத்து ரக வாழைப்பழங்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.
- 25 Feb 2025 4:35 PM IST
பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- 25 Feb 2025 4:34 PM IST
மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று பிரயாக்ராஜ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 25 Feb 2025 4:34 PM IST
திருப்பூர்: இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காள தேசத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என போலியான ஆதார் கார்டு வைத்திருந்த மூசா அலி (26), அவரது மனைவி நிஷா அக்தர் (23) மற்றும் ரோனி அலி (22) மூவர் கைது செய்யப்பட்டனர்.
- 25 Feb 2025 4:33 PM IST
திண்டிவனம்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்த ஆந்திர இளைஞர் கார்த்திக்குமார் (18) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், சிறுமியின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில்தான் சிறுமி இன்ஸ்டாகிராமில் ஆந்திர இளைஞரிடம் பேசியது தெரியவந்துள்ளது.







