இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Feb 2025 8:03 PM IST
டெல்லியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
- 25 Feb 2025 7:32 PM IST
த.வெ.க.வின் 2-ம் ஆண்டு துவக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று சென்னைக்கு வந்துள்ளார்.
- 25 Feb 2025 7:27 PM IST
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய 13 மணி நேர சோதனை நிறைவுபெற்றது. அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்துள்ளது.
- 25 Feb 2025 6:58 PM IST
பிட்காயின் ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 60 இடங்களில் சி.பி.ஐ. விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
- 25 Feb 2025 6:38 PM IST
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், கீழையூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
- 25 Feb 2025 6:14 PM IST
டெல்லியில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நாடாளுமன்ற இல்லத்தில் இன்று நடந்து முடிந்துள்ளது.
- 25 Feb 2025 5:52 PM IST
நாளை தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
- 25 Feb 2025 5:25 PM IST
2020-ம் ஆண்டுக்கு பின்பு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
- 25 Feb 2025 5:20 PM IST
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் இருந்து டைடல் பார்க் வரை நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்ட 510 மீ. நீளம், 8.50 அடி அகலம் கொண்ட யு வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
- 25 Feb 2025 5:14 PM IST
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் தவெக தலைவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்றுள்ளார்.









