இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சென்னை
Live Updates
- 25 Feb 2025 12:41 PM IST
தமிழ்நாட்டில் 31 மக்களவை தொகுதிகள்தான் இருக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் 39 மக்களவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும். தமிழ்நாட்டில் 31 மக்களவை தொகுதிகள்தான் இருக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 25 Feb 2025 12:36 PM IST
வரும் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வரும் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 25 Feb 2025 11:53 AM IST
டெல்லி சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி உள்பட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 11 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- 25 Feb 2025 10:16 AM IST
வங்கக்கடலில் நிலநடுக்கம்
வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது
Related Tags :
Next Story







