இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Sept 2025 7:33 PM IST
அமெரிக்கா செல்ல புதிய வழித்தடத்தில் பறந்த நெதன்யாகு
கைதாவதில் இருந்து தப்பிக்க, அமெரிக்கா சென்ற நெதன்யாகு விமானம். புதிய வழித்தடத்தில் பறந்துள்ளது. தங்கள் நாட்டிற்கு நெதன்யாகு வந்தால் அவரை கைது செய்வோம் என அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் அறிவித்துள்ளதால், அந்த நாடுகளின் வான்வெளி தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 26 Sept 2025 7:28 PM IST
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
திருப்பதி பிரமோற்சவத்திற்காக திருவில்லிப்புதூர் ஆண்டாள் தாயார் சூடிக் கொடுத்த மாலை, கிளி சிறப்பு பூஜைகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதியில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு இந்த மாலை, கிளி ஆகியவை சாற்றப்படும்.
- 26 Sept 2025 7:25 PM IST
மீண்டும் தேர்தலில் நிற்க மாட்டேன் - ஜெலென்ஸ்கி
ரஷியா உடனான போர் முடிந்தவுடன் தான் பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பதவி விலகினாலும் மீண்டும் தேர்தலில் நிற்கப்போவது இல்லை (என்றும், போரை முடிப்பதே தனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
- 26 Sept 2025 6:33 PM IST
2,417 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
- 26 Sept 2025 4:55 PM IST
விஜய் பிரசாரம் - நிபந்தனைகளை விதித்த காவல்துறை
* கரூரில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை.
* பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கொடிகள் பதாகைகளை உடனே அகற்ற வேண்டும்.
* அனுமதி இல்லாமல் எல்இடிதிரை, மேடை அமைக்க கூடாது.
* அனுமதி பெறாமல் பதாகைகள் வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும்.
- 26 Sept 2025 4:51 PM IST
"ஆட்சி மாற்றம் விரும்புவோர் வரலாம்” - தலைவர் ஜி.கே.வாசன்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர். ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாராக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
- 26 Sept 2025 4:36 PM IST
47 அணு குண்டுகளை தயாரிக்க யுரேனியம் ரெடி
47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 26 Sept 2025 3:43 PM IST
இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் எகிறும் எதிர்பார்ப்பு
ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், வங்காள தேச அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறுகிறது
- 26 Sept 2025 3:16 PM IST
டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லை
அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை. டிரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.
- 26 Sept 2025 2:31 PM IST
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?
தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31 ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த டிஜிபி யார் என்பது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பொறுப்பு டிஜிபி-யாக காவல்துறை அதிகாரி வெங்கட்ராமனை தமிழ்நாடு அரசு நியமித்திருந்த நிலையில், அந்த நியமனம் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறுவதாக கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.















