இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Sept 2025 1:54 PM IST
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்த பாக்.அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
நடப்பு ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
- 26 Sept 2025 1:53 PM IST
மழை நீர் ஒழுகும் வீட்டில் பெற்றோர்.. கண்ணீர் விட்ட மாணவிக்கு புதிய வீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாணவிக்கு புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
- 26 Sept 2025 1:48 PM IST
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
இன்று (26-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- 26 Sept 2025 1:26 PM IST
ஐ.பி.எல்.2026: ராஜஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் டிராவிட்டுக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா நியமிக்கப்பட உள்ளார்.
- 26 Sept 2025 1:24 PM IST
சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
சென்னையில் 27.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
- 26 Sept 2025 1:21 PM IST
மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்; டொனால்டு டிரம்ப்
மேற்கு கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- 26 Sept 2025 1:19 PM IST
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை.. 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விவரம்
காலாண்டு விடுமுறை. ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- 26 Sept 2025 1:19 PM IST
மகனின் கனவுக்காக தங்கத்தை அடமானம் வைத்த அம்மா...இப்போது பிரபல நட்சத்திரம் - யார் தெரியுமா?
மகனின் சினிமா கனவை நனவாக்க, அம்மா தன் தங்கத்தை அடமானம் வைத்து 44 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.
- 26 Sept 2025 1:15 PM IST
கரூரில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி
நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து, கரூரில் விஜய் பிரசாரம் செய்ய பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு தவெக சார்பில் போலீசில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.















