இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
தினத்தந்தி 3 Sept 2025 9:12 AM IST (Updated: 4 Sept 2025 9:14 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் மட்டும் இயக்க அனுமதி
    3 Sept 2025 4:15 PM IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் மட்டும் இயக்க அனுமதி

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் இன்று (செப்.03) முதல் பரிசல் மட்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அருவிகளில் குளிக்க தடை தொடர்கிறது.

  • தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை?
    3 Sept 2025 4:12 PM IST

    தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை?

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவதை பாஜக தலைமை விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலை விட்டு அண்ணாமலையை தூரமாக வைத்திருக்க வேண்டும் என அமித்ஷா கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா
    3 Sept 2025 3:38 PM IST

    திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா

    திருவாரூர் மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றனர்.

  • தீயாய் பரவும் காய்ச்சல் - சுகாதாரத்துறை உத்தரவு
    3 Sept 2025 3:31 PM IST

    தீயாய் பரவும் காய்ச்சல் - சுகாதாரத்துறை உத்தரவு

    தமிழகத்தில் இன்றும் நாளையும் காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு போன்ற அறிகுறிகளோடு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறை உள்ளவர்கள் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • கச்சத்தீவு யாருக்கு சொந்தம் - இலங்கை மந்திரி சுந்திரலிங்கம் பிரதீப் பதில்
    3 Sept 2025 3:29 PM IST

    கச்சத்தீவு யாருக்கு சொந்தம் - இலங்கை மந்திரி சுந்திரலிங்கம் பிரதீப் பதில்

    கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தமானது. உலகத்திற்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அரசியலுக்காக இதுகுறித்து பேசும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த உண்மையை கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று இலங்கை மந்திரி சுந்திரலிங்கம் பிரதீப் தவெக தலைவர் விஜய்க்கு பதில் கூறியுள்ளார்.

  • சிஏஏ சட்டத்திருத்தம் - குடியுரிமை பெற காலக்கெடு நீட்டிப்பு
    3 Sept 2025 2:16 PM IST

    சிஏஏ சட்டத்திருத்தம் - குடியுரிமை பெற காலக்கெடு நீட்டிப்பு

    வங்காள தேசம், பாக்., ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினர் குடியுரிமை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. “2024 டிசம்பர் வரை இந்தியா வந்த சிறுபான்மையினர் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் 2014ல் இருந்து 2024 டிசம்பர் வரை உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  • 3 Sept 2025 2:02 PM IST

    அன்புமணி மீது நடவடிக்கை இல்லை; விளக்கம் அளிக்க காலக்கெடு நீடிப்பு

    அன்புமணி மீது பாமக பொதுக்குழு தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்கவில்லை. செப்டம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்கா விட்டால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • டெல்லி செல்லாதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்
    3 Sept 2025 1:57 PM IST

    டெல்லி செல்லாதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்

    அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் இன்று டெல்லி செல்லவில்லை. டெல்லியில் நடைபெறும் பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு செல்லாதது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

  • முதல்-அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் - சபாநாயகர் அப்பாவு
    3 Sept 2025 1:55 PM IST

    முதல்-அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் - சபாநாயகர் அப்பாவு

    ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒருபோதும் இடையூறு செய்யாது; முடிந்தவரை அரசு உதவி செய்யும்; முதல்-அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

  • நாய்களை கட்டுப்படுத்துங்கள் - நடிகர் பெஞ்சமின்
    3 Sept 2025 12:31 PM IST

    நாய்களை கட்டுப்படுத்துங்கள் - நடிகர் பெஞ்சமின்

    தெருவில் நடந்து செல்வோரைக் கடிக்கும் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை. நாய்க்கடியில், தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தெரு நாய்கள் குறித்து புகார் அளித்தால் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்வதில்லை என்று நடிகர் பெஞ்சமின் கூறியுள்ளார்.

1 More update

Next Story