இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
தினத்தந்தி 3 Sept 2025 9:12 AM IST (Updated: 4 Sept 2025 9:14 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • சென்னையில் அரசு பஸ்சில் டிக்கெட்டுகள் திருட்டு
    3 Sept 2025 11:46 AM IST

    சென்னையில் அரசு பஸ்சில் டிக்கெட்டுகள் திருட்டு

    சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சில் இருந்து ரூ.2.44 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளன. டிக்கெட்டுகள் திருட்டு பற்றி பஸ் நடத்துநர் முத்துக்குமார் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நடத்துநர் புகாரின் பேரில் மாதவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பிளாட்பார்ம் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது ஜொமோட்டோ
    3 Sept 2025 11:34 AM IST

    பிளாட்பார்ம் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது ஜொமோட்டோ

    உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ, தனது பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ.10லிருந்து ரூ.12ஆக உயர்த்தியது. கடந்த ஆண்டு 3 ரூபாய் வரை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது
    3 Sept 2025 11:33 AM IST

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

    டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளார்.

  • விரிவடையும் பனிப்பாறைகளால் ஆபத்து
    3 Sept 2025 11:31 AM IST

    விரிவடையும் பனிப்பாறைகளால் ஆபத்து

    இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன. இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது என மத்திய நீர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • பாமக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது
    3 Sept 2025 11:31 AM IST

    பாமக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது

    தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் 22 பேர் கொண்ட பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தொடங்கியது.அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, விளக்கம் தர அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு அன்புமணி தரப்பு பதில் தராத நிலையில், பாமக நிர்வாகக் குழு கூடுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

  • திருச்சி புறப்பட்டார் திரவுபதி முர்மு
    3 Sept 2025 10:58 AM IST

    திருச்சி புறப்பட்டார் திரவுபதி முர்மு

    தமிழ்நாட்டுக்கு நேற்று வருகை தந்திருந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று மலர்க்கொத்து வழங்கி திருச்சிக்கு வழி அனுப்பி வைத்தார்.

  • செங்கோட்டையன் உடன் முன்னாள் எம்.பி. சந்திப்பு
    3 Sept 2025 10:45 AM IST

    செங்கோட்டையன் உடன் முன்னாள் எம்.பி. சந்திப்பு

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடன் முன்னாள் எம்.பி. சந்த்தியபாமா சந்தித்தார். செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று முன்னாள் எம்.பி. சத்தியபாமா கூறியுள்ளார். பழனிசாமியுடன் மோதல் நீடிக்கும் நிலையில் வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக செங்கோட்டையன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • எதிர்க்கட்சி மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை
    3 Sept 2025 10:38 AM IST

    எதிர்க்கட்சி மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடப்பதற்கு முன், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வருவாய் இழப்பை ஈடு செய்ய, இழப்பீட்டு வரியை மத்திய அரசு தர வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

  • இந்தியர்கள் முதலிடம்
    3 Sept 2025 10:22 AM IST

    இந்தியர்கள் முதலிடம்

    இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சென்றுள்ளனர். அதில் 46,473 பேர் இந்தியர்கள். பிரிட்டன், ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

1 More update

Next Story