இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
x
தினத்தந்தி 31 March 2025 8:58 AM IST (Updated: 1 April 2025 10:11 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 31 March 2025 6:01 PM IST

    பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஏப்ரல் 2ம் தேதி ஒருநாள் மட்டும் ரோப் கார் சேவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் படிப்பாதை அல்லது மலை இழுவை ரயில் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 31 March 2025 6:00 PM IST

    பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • 31 March 2025 4:42 PM IST

    டெல்லி அருகே நொய்டாவில் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் 15 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை அணைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். 

  • 31 March 2025 4:24 PM IST

    விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

  • 31 March 2025 4:24 PM IST

    விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

  • 31 March 2025 4:19 PM IST

    மன்னவனூர் சூழல் சுற்றுலா தளத்தில், நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

  • 31 March 2025 4:11 PM IST

    பொள்ளாச்சி அருகே ஓட்டலில் போதிய வருவாய் இல்லாததால் கணவன் - மனைவி த*கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிள்ளைகள் விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில் பெற்றோர் விபரீத முடிவு எடுத்துள்ளனர்.

  • 31 March 2025 4:09 PM IST

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரூ.83,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  • 31 March 2025 4:06 PM IST

    மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதை பாருங்கள் என மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசி உள்ளார்.

  • 31 March 2025 4:04 PM IST

    கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகள் நாளை (ஏப்ரல் 1) முதல் அமலாகிறது.

1 More update

Next Story