இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 March 2025 3:16 PM IST
விழுப்புரம் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் சாலையீரம் உள்ள நகராட்சி மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் வசித்துவந்த 44 பேருக்கு மாற்று இடத்தில் இலவச பட்டா வழங்கினார் வனத்துறை அமைச்சர் பொன்முடி. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார்.
- 31 March 2025 3:12 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் ஏப்ரல் 4 வரை வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னையில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 31 March 2025 1:55 PM IST
மியான்மரில் நிலநடுக்கத்தின்போது, ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து மரணம் அடைந்துள்ளனர். மியான்மரை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு இதனை அறிவித்து உள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளி கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களில், இதுவரை 1,700-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
- 31 March 2025 1:26 PM IST
த.வெ.க. தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன் என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யை முதலில் களத்திற்கு வர சொல்லுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
- 31 March 2025 1:17 PM IST
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பெயரில் 2-வது முறையாக போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனது பெயரிலான போலி முகநூல் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- 31 March 2025 1:04 PM IST
சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில், வடமாநில தொழிலாளி ஒருவர் பூமி பூஜையின்போது, கற்பூரம் ஏற்றி பூசணிக்காயை உடைக்க முற்பட்டார். அப்போது, பூசணிக்காயை எப்படி சுற்ற வேண்டும் என பூந்தமல்லி எம்.எல்.ஏ. அவருக்கு இந்தியில் சொல்லிக் கொடுத்து, அதன்படி சுற்ற செய்துள்ளார்.
- 31 March 2025 12:56 PM IST
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ஏப்ரல் 19-ந்தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.
இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்து நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், ஒரு நவீன மற்றும் திறன் வாய்ந்த ரெயில் சேவையானது இந்த பகுதிக்கு கிடைக்கும்.
- 31 March 2025 12:54 PM IST
பிரதமர் மோடி ஏப்ரல் 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். அப்போது, அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.
பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
- 31 March 2025 11:42 AM IST
அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.