தண்டவாள பராமரிப்பு பணி: கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 30 May 2025 3:15 PM IST (Updated: 30 May 2025 3:16 PM IST)
t-max-icont-min-icon

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story