சுனாமி நினைவு தினம்; உயிரிழந்தோருக்கு செல்வப்பெருந்தகை அஞ்சலி

அந்த துயர நாள் நம் மனங்களில் என்றும் மறையாத வலியை ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது;
2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட பேரழிவான சுனாமியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை இன்று ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூருகிறோம். அந்த துயர நாள் நம் மனங்களில் என்றும் மறையாத வலியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் பணிவான அஞ்சலி. உயிர்தப்பியோரின் துயரம், துணிவு மற்றும் மீண்டு வந்த மனவலிமைக்கு எங்கள் மரியாதை.
இயற்கையின் வலிமையை உணர்ந்து, பேரிடர் விழிப்புணர்வுடன், மனித நேயமும் ஒற்றுமையும் கொண்ட பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவோம் என்பதை இந்நாளின் உறுதிமொழியாக ஏற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






