டிடிவி தினகரன் பிறந்தநாள்; அண்ணாமலை வாழ்த்து

கோப்புப்படம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவர் டிடிவி தினகரன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு, இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர். மக்கள் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவர்.
அண்ணன் டிடிவி தினகரன், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






