9,230 பயனாளிகளுக்கு ரூ. 119.70 கோடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்


9,230 பயனாளிகளுக்கு ரூ. 119.70 கோடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
x

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம், தாயுமானவர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 9,230 பயனாளிகளுக்கு 119.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6.12.2025) விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம், தாயுமானவர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 9,230 பயனாளிகளுக்கு 119.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 38 நபர்களுக்கு 11.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானிய உதவிகளையும்,

தாட்கோ சார்பில் முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம், தூய்மைப் பணியாளர் நல வாரியத்திட்டம், தூய்மைப் பணியாளர் நல வாரிய அட்டை உள்பட 172 பயனாளிகளுக்கு 3.85 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 311 நபர்களுக்கு 5.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும், 336 நபர்களுக்கு 5.04 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இணைய வழி இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 1,199 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் 41.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளையும், 721 பயனாளிகளுக்கு பழங்குடியினர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளையும்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் தாயுமானவர் திட்டம், நலிவு நிலை குறைப்பு கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதி, வங்கி பெருங்கடன், வட்டார வணிக மைய கடனுதவி ஆகிய திட்டங்களின் கீழ் மொத்தம் 2,724 நபர்களுக்கு 6.74 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 61 பயனாளிகளுக்கு 31.90 லட்சம் ரூபாய்க்கான நுண் கடனுதவிகளையும், வழங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 36 நபர்களுக்கு தையல் இயந்திரங்கள், 11 நபர்களுக்கு சலவைப் பெட்டிகள், 20 நபர்களுக்கு புதிரை வண்ணார் நல வாரிய அட்டை, 1 நபருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட ஓய்வுதியம், 2 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள் என 70 நபர்களுக்கு 4.08 கோடி ரூபாய்கான நலத்திட்ட உதவிகளையும்,

வேளாண்மை மற்றும் பொறியியல் துறையின் கீழ் 168 நபர்களுக்கு 2.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களையும்,

சமூக நலத்துறையின் சார்பில் 10 பெண்களுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு முதிர்வுத் தொகை காசோலைகள், 54 பெண்களுக்கு ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம், 5 பெண்களுக்கு அன்னை தெரசா நினைவு ஆதவற்ற மகள் திருமண நிதி உதவி திட்டம், 147 பெண்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், 1 பெண்ணிற்கு டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் மொத்தம் 217 பெண்களுக்கு 3.15 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும்,

தொழிலாளர் நலத்துறையின் கீழ் 2,128 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை, 141 நபர்களுக்கு ஓய்வூதியம், 135 நபர்களுக்கு திருமண உதவித் தொகை, 18 நபர்களுக்கு இயற்கை மரண நிதியுதவி, 2 நபர்களுக்கு சாலை விபத்து நிவாரணம், 1 நபருக்கு ஆட்டோ மானியம், 3 நபர்களுக்கு மூக்கு கண்ணாடி மானியம் என 2,428 நபர்களுக்கு 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 40 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 90 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைக்கான பணிநியமன ஆணைகளையும்,

தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் கீழ் 10 நபர்களுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், 10 நபர்களுக்கு பிரதம மந்திரியின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், 1 நபருக்கு நுண்ணீர் பாசன திட்டம், 29 நபர்களுக்கு மானாவரி மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளையும்,

முன்னோடி வங்கியின் மூலம் 34 நபர்களுக்கு 32.40 லட்சம் ரூபாய்க்கான கறவை மாடு கடனுதவி, 5 நபர்களுக்கு 17.05 லட்சம் ரூபாய்க்கான கல்வி கடனுதவிகளையும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையின் கீழ் 6 நபர்களுக்கு 3.00 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 500 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 30 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 20 பயனாளிகளுக்கு வாயு சலவைப் பெட்டிகளையும், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 10 நபர்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.

இன்றைய அரசு விழாவில் கூடுதல் மொத்தமாக 9,230 பயனாளிகளுக்கு 119.70 கோடி ரூபாய் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ரா.லட்சுமணன், அன்னியூர் அ.சிவா, ஜெ.மணிகண்ணன், ச.சிவக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், காவல் கண்காணிப்பாளர் பா.சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா., மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story