வைகாசி விசாக திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை


வைகாசி விசாக திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 30 May 2025 7:30 PM IST (Updated: 30 May 2025 7:31 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

தூத்துக்குடி,

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. விசாக நட்சத்திரத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூன் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story