வால்பாறை: தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானை

யானை அருகே வருவதை பார்த்ததும் தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடினர்.
வால்பாறை: தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானை
Published on

கோவை,

கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை-சாலக்குடி சாலைக்கு காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வால்பாறை சுற்று வட்டார பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு அருகே சிறுகுன்றா எஸ்டேட் இடைச்சோலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியே வந்தது. அந்த யானை கூழாங்கல் ஆற்றுக்கு அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு நின்றது. அப்போது அங்கு கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் யானை அருகே வருவதை பார்த்ததும் தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடினர்.

இது குறித்த தகவலின் பேரில் வால்பாறை வனச்சரக வனத் துறையினர் கூழாங்கல் ஆற்றுப் பகுதி, சிறுகுன்றா எஸ்டேட் இடைச்சோலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானையின் நடமாட்டம் இருப்பதால் தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம். மேலும் வனவிலங்குகளை காண இரவில் வாகனங்களில் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com