வந்தே பாரத் ரெயில் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு - மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி


வந்தே பாரத் ரெயில் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு - மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 21 Dec 2025 5:59 PM IST (Updated: 21 Dec 2025 6:00 PM IST)
t-max-icont-min-icon

வந்தே பாரத் ரெயில் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையிலான, 20665/66 என்ற எண் கொண்ட வந்தே பாரத் ரெயில், விருத்தாச்சலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென்கிற கோரிக்கையினை, அப்பகுதி மக்கள் சார்பாக சமீபத்தில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவிடத்தில் வழங்கியிருந்தேன்.

விருத்தாச்சலம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தொழில் மற்றும் பணி நிமித்தமாக விரைவான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய நினைக்கும் விருத்தாச்சலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பயன்படும் வகையில், குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

தமிழக மக்களிடமிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு, தொடர்ந்து விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்-க்கும், தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story