வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது புகழை போற்றியும் வருகின்றனர்.

இந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story