திமுகவை தீயசக்தி என விமர்சித்த விஜய்.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்


திமுகவை தீயசக்தி என விமர்சித்த விஜய்.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்
x

விஜய்யிடம் என்றைக்காவது கேள்வி கேட்டு இருக்கிறீர்களா என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் விஜய் பேசினார். அப்போது விஜய், திமுகவை கடுமையாக சாடினார். விஜய் கூறியதாவது:- எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையால் திமுகவை காலி செய்தார்கள். அவர்கள் ஏன் இவ்வளவு கடினமாக பேசுகிறார்கள் என்று அப்போது சிந்தித்தேன், இப்போதுதான் புரிகிறது. திமுக ஒரு தீய சக்தி தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி. 2026-ம் ஆண்டு தேர்தலில் தீய சக்தி திமுகவிற்கும், தூயசக்தி தவெகவிற்கும்தான் போட்டியே.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்கு மிகப் பெரிய பலம். அவரைப் போல இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்” என்று விஜய் பேசினார். விஜய்யின் இந்த பேச்சு குறித்து துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், திமுகவை தீய சக்தி தீயசக்தி என்று விஜய் விமர்சித்ததாக என்னிடம் கேட்கிறீர்கள். என்றைக்காவது விஜய்யிடம் இப்படி நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? ” என்று பதிலளித்தார்.

1 More update

Next Story