தேர்தல் ஆணையத்தில் விஜய் ரசிகர்கள்: ஆதவ் அர்ஜுனா பேச்சு

கொள்கை ரீதியாக பாஜகவை எங்கு எதிர்க்க வேண்டுமோ, அங்கு எதிர்ப்போம் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
சென்னை,
தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
2016-ல் தனித்து நின்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தது போல, 2026-ல் விஜய் ஆட்சி அமைப்பார். தேர்தல் ஆணையத்தில் உள்ள விஜய் ரசிகர்கள்தான் கையெழுத்திட்டு விஜய்க்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். தலைவர் தைரியத்தாலோ அல்லது அன்பாலோ உருவாவதில்லை; தியாகத்தால் உருவாக்கப்படுவார். நீட், ஜிஎஸ்டி, இந்தி மொழி எது வந்தாலும் முதல் எதிர்ப்பு எங்களிடமிருந்துதான் வரும்.
சிபிஐ அலுவலகம் சென்றால் அங்கும் விஜய்யைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். யார் அமைதியாக இருக்கிறார்களோ, அவர்கள்தான் தைரியமாக இருக்கிறார்கள் என்பதற்கான அர்த்தம் அது. திருமாவை அடியாளாக திமுக பயன்படுத்துகிறது. திமுக ஆட்சியில் ஊழல் இல்லை என்று திருமாவளவன் சொல்ல முடியுமா? திருமாவளவன் கட்சியில் மொத்தமே 20 பேர்தான் உள்ளனர். கொள்கை ரீதியாக பாஜகவை எங்கு எதிர்க்க வேண்டுமோ, அங்கு எதிர்ப்போம்” என்றார்.






