எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய்: சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படுகிறது.
நெல்லை,
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சாத்தான்குளம் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யவே அப்போதய அரசு தயங்கியது ஆனால் திருப்புவனம் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய அந்த அரசியல் கட்சி தலைவருக்கு தெரியவில்லை.
எழுதிக்கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய். இவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்த போது பாண்டிச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் நேரில் சென்று அமித்ஷாவிடம் பேசி அதனை சரி செய்து வைத்தார். வருமான வரி சோதனை நடத்திய அதிகாரி அருண்ராஜுக்கு பதவி வழங்கப்படுகின்றது.
வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படுகிறது. யார் சொல்லி இந்த போராட்டம் நடத்தினார் என்பது தெரியவில்லை. பாஜக அமித்ஷா பின்னால் விஜய் இருப்பதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்காக அவரை களத்தில் இறக்கி உள்ளதாக தோன்றுகிறது" என்றார்.






