‘தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்க வேண்டும்' - நடிகை கஸ்தூரி பேட்டி

விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்களே த.வெ.க. தலைவர் விஜய் பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அவருடன் இல்லை. கரூரில் உயிரிழப்புகளை சந்தித்த குடும்பம் கூட அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும். விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது. ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






