'2026 தேர்தலில் விஜய்க்கு 2-வது இடம்' - தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தி.மு.க அரசியலுக்காக செயல்படுகிறது. பா.ஜ.க அவசியத்திற்காக செயல்படுகிறது. அவர்கள் அமைத்திருப்பது பொருந்தாத கூட்டணி, அதிகாரத்தை பயன்படுத்தும் கூட்டணி. பா.ஜ.க. அமைத்திருப்பது மக்கள் நல கூட்டணி. குளத்தில் வட்ட இலையோடு தாமரை மலரும், தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும்.
2026 தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையில்தான் போட்டி என்று விஜய் கூறுகிறார். 2-வது இடத்திற்கு வருவதற்கு வேண்டுமானால் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி வரலாம். விஜய் 2-வது இடத்திற்கும் வரலாம். ஏனென்றால் நாங்கள் முதல் இடத்திற்கு வருவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






