தவெக மாநாட்டில் பங்கேற்க விஜய்யின் பெற்றோர் மதுரை வருகை


தவெக மாநாட்டில் பங்கேற்க விஜய்யின் பெற்றோர் மதுரை வருகை
x

தொண்டர்கள் பெரும் அளவில் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

மதுரை,

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாடானது, நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதம் உள்ள பணிகளை ஏற்பாட்டு குழுவினர் இரவு, பகலாக செய்து வருகின்றனர். மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. . தொண்டர்கள் பெரும் அளவில் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தவெக மாநாட்டில் பங்கேற்க, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா மதுரை வந்தடைந்தனர்.தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கி ஓய்வுக்குப்பின் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா நாளை மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

1 More update

Next Story