தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டிமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
உலகச் செயல்முறை மருத்துவ (Occupational Therapy) நாளில், மாண்புடனும் சுதந்திரமாகவும் மக்கள் செயல்பட உதவும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
நமது திராவிட மாடல் அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ – ஒருங்கிணைந்த சேவை மையம், ஆட்டிசம் பாதித்தோருக்கான சிறப்புத் திறன் மையம் ஆகியவற்றைத் தொடங்கி இந்தச் செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது. அக்கறை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒவ்வொரு தனிநபருக்கும் வாய்ப்பு கொண்ட தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






