வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாமகவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் - எடப்பாடி பழனிசாமி


வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாமகவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் - எடப்பாடி பழனிசாமி
x

தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அதிமுக நல்லாட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!

அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!

மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அதிமுக நல்லாட்சியினை அமைப்போம் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story