68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம்: உதயநிதி ஸ்டாலின்

2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாசிச பாஜகவும் - தேர்தல் ஆணையமும் தமிழ்நாட்டில் அரங்கேற்றத் துடிக்கும் S.I.R எனும் வாக்குரிமைப் பறிப்புச்சதியை முறியடிக்க நம் உடன்பிறப்புகள் களமிறங்கி விட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகளுடன் நாமும் கலந்து கொண்டோம்.
ஓரணியில் நின்று அநியாய வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்.2026 தேர்தலில் கழக அணி 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம். தமிழ்நாடு என்றும் தலைகுனியாது என்பதை மீண்டும் நிரூபிப்போம். என தெரிவித்துள்ளார் .
Related Tags :
Next Story






