2026-ல் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்: உதயநிதி ஸ்டாலின்


2026-ல் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்: உதயநிதி ஸ்டாலின்
x

ஒவ்வொரு நாளும் ஓரணியில் நின்று உழைப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கழகத்தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், சட்டமன்ற தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைய தினம் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகம் ஏற்பாட்டில், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான கழக நிர்வாகிகள் - அணிகளின் நிர்வாகிகள் - பூத் கமிட்டி நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடினோம்.

வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழ்நாட்டில், சூழ்ச்சிகள் மூலமாக காலடி எடுத்து வைக்க துடிக்கும் பாசிஸ்டுகளையும் - அவர்களின் அடிமைகளையும் வீழ்த்த, அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் ஓரணியில் நின்று உழைப்போம் ; 2026-இல் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story